இன்று சுதந்திர தின விழா: நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தேசிய கொடி ஏற்றுகிறார்

இன்று சுதந்திர தின விழா: நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தேசிய கொடி ஏற்றுகிறார்

Update: 2022-08-14 13:18 GMT

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தேசிய கொடி ஏற்றுகிறார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர், சிறப்பாக பணியாற்றி அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்க உள்ளார். தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அங்கு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெற உள்ள மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்