காளையார்கோவிலில் கலைக்கல்லூரி அமைக்க மனு
காளையார்கோவிலில் கலைக்கல்லூரி அமைக்க சட்டப்பேரவை பொதுகணக்கு குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
காளையார்கோவிலில் கலைக்கல்லூரி அமைக்க சட்டப்பேரவை பொதுகணக்கு குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
மனு
சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்குழு சார்பில் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், பாலு, பொருளாளர் பாரதிதாசன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குகுழு தலைவர் செல்வபெருந்தகையிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-.
சிவகங்கை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காளையார்கோவிலில் மாணவ-மாணவிகள் படிக்கும் வகையில் அரசு கலைக்கல்லூரி ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அரசனூர், இலுப்பக்குடி மற்றும் கிளாதரி பகுதியில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை நகரை சுற்றி சுற்றுச்சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அதனை விரிவுபடுத்தி சுற்றுச்சாலை அமைத்து தரவேண்டும்.
வாரச்சந்தை
இதேபோன்று சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் அரசு உயர்நிலை பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லலில் வாரச்சந்தை மற்றும் பஸ் நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.