கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் படம் நீக்கம்

கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் படம் நீக்கம்

Update: 2022-07-11 14:57 GMT

கோவை, ஜூலை

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் படத்தை கட்சியினர் அகற்றியதுடன் உடைத்து நொறுக்கி ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டம்

சென்னையில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகமாக இதய தெய்வம் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் படங்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அந்த படங்களை கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

படத்தை நொறுக்கினர்

அப்போது ஆவேசத்தில், கட்சியினர் சிலர் அந்த படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் நொறுக்கினர். பின்னர் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர் செல்வம் சென்றதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


Tags:    

மேலும் செய்திகள்