51 ஊராட்சிகளுக்கு தென்னங்கன்றுகள் விசைத்தெளிப்பான்கள்
கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தில் 51 ஊராட்சிகளுக்கு தென்னங்கன்றுகள் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக 51 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனை கிராம பஞ்சாயத்துகளில் வருகிற இன்று (திங்கட்கிழமை) அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யபட்டு திட்ட பயனாளிகளுக்கு விசைத் தெளிப்பான்கள், தென்னங் கன்றுகள் பயிறு வகைகள் கைத் தெளிப்பான், காய்கறி விதைகள் மற்றும் உளுந்து விதைகள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.