விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
நெட்டூரில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டாரம் நெட்டூர் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் 2023-24-ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 மரக்கன்றுகள் வீதம் முழு மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் தலைமை தாங்கி, தென்னங்கன்று பராமரிப்பு மற்றும் உர மேலாண்மை குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் முருகன் வரவேற்று பேசினார். நெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் சண்முகபிரியா மானிய திட்டங்கள் குறித்து பேசினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், செந்தில்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னோடி விவசாயிகள் முப்புடாதி, வேலாயுதம், சங்கர் ஆகியோர் செய்து இருந்தனர்.