கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-10 19:00 GMT

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, செங்கல்பட்டு வீட்டு வசதித்துறையில் ஊழியர்களை அவதூறாக பேசுவதுடன் அவர்களை பணிக்கு வரவிடாமல் மிரட்டல் விடுத்து வரும் அதிகாரியை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை செயலாளர் ராஜாமணி, மகளிர் துணைக்குழு தலைவர் அமுதாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்