கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.;

Update:2023-12-06 18:35 IST

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார்.

கொளத்தூர் பாலாஜி நகரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற முதல்-அமைச்சர், அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்