இயற்கை மீதான சென்னை ஐகோர்ட்டின் அக்கறை இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது - ராமதாஸ்

இயற்கை மீதான சென்னை ஐகோர்ட்டின் அக்கறை இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-08-23 19:44 GMT

சென்னை,

அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த கோர்ட்டும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த கோர்ட்டும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது.

இயற்கை மீதான சென்னை ஐகோர்ட்டின் அக்கறை எங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. ஐகோர்ட்டின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற வேண்டும்!" இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்