தேசிய அளவில் 400 சர்க்கரை ஆலைகள் மூடல்
தேசிய அளவில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 400 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
தேசிய அளவில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 400 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆலைகள் மூடல்
132 ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அதிலும் கர்நாடக மாநிலத்தில் 2 சர்க்கரை ஆலைகளும், உத்தர பிரதேசத்தில் 77 சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டு வரும் நிலையில் மற்ற மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டு விட்டன.
அடுத்து வரும் நாட்களில் இவைகளும் மூடப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்தாண்டை போலவே தற்போதும் 28 சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்க்கரை உற்பத்தி கடந்தாண்டில் 0.77 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் தற்போது 1.08மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வு
தேசிய அளவில் கடந்த அக்டோபர் முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரையில 5.4 சதவீதம் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
அதாவது 31.87 மில்லியன் டன்னாக கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் இருந்த சர்க்கரை உற்பத்தி தற்போது 31.18 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கூடுதலான சர்க்கரை ஆலைகள் மூடப்படும் நிலையில் சர்க்கரை உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் நிலையில் சர்க்கரை விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.