ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை: அமைச்சர் முத்துசாமி

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Update: 2024-09-25 01:24 GMT

ஈரோடு,

ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஏற்கனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனவே முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மதுக்கடைகள் மூடப்படும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்தால் தமிழகத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்.

பிரச்சினைக்குரிய டாஸ்மாக் மதுக்கடைகளை தேர்வு செய்து வருகிறோம். எனவே மதுக்கடைகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்து இருக்கிறோம். ஆனால் மூடப்படும் கடைகள் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்