தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

கயத்தாறு அருகே தூய்மை பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-11 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 40). இவர் கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுடலைமணி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்