நெலாக்கோட்டையில் தூய்மை பணி

நெலாக்கோட்டையில் தூய்மை பணி நடந்தது.;

Update:2023-04-03 00:15 IST

பந்தலூர், 

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதிர்காடு முதல் நெலாக்கோட்டை வரை சாலையோரங்களில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி நடைபெற்றது. கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் பிரபு, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் அப்துல் ஹாரீஸ் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பஸ்சில் சென்ற பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் குப்பைகளை சாலையோரத்தில் வீசக்கூடாது, குப்பை தொட்டிகளில் போட வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்