மெய்கண்டேஸ்வரர் கோவிலில் தூய்மை சேவை பணி
பிங்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மெய்கண்டேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
ஆரணி
பிங்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மெய்கண்டேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவை பணி நடந்தது. ஆரணியை அடுத்த மெய்யூர் ஊராட்சியில் உள்ள மெய்கண்டேஸ்வரர் சிவன் கோவில் மற்றும் அப்பகுதியை சுற்றிலும் பள்ளியின் துணைத் தாளாளர் ஆர்.சித்ரா, பள்ளியின் முதல்வர் ஜீனா பெட்ஸி மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவியர்களுடன் இணைந்து தூய்மைப்பணியுடன் உழவாரப்பணியை மேற்கொண்டனர்.
ஒன்றிய குழு உறுப்பினர் விமலா காசிலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா கமலக்கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணிகள் நடந்தன.