விழுப்புரம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட பணி
விழுப்புரம் நகராட்சியில் தூய்மையே சேவை திட்ட பணி நடந்தது.
பாரத பிரதமர் திட்டமான தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி நடந்தது. இதற்கு விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் தலைமை தாங்கி, வருமான வரித்துறை அதிகாரி சத்ரா பிரகாஷ் குப்தா முன்னிலையில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நகராட்சி அம்மா பூங்கா வளாகம், பூந்தோட்டம் அரசு பள்ளி வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் கிடந்த குப்பை, பிளாஸ்டிக் கழிகளை அகற்றி துாய்மைப்பணி மேற்கொண்டனர்.