ரெயில் மோதி துப்புரவு ஊழியர் பலி

காட்பாடியில் ரெயில் மோதி துப்பிரவு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-01 15:55 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50), வேலூர் மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கழிஞ்சூரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்