தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
பாளையங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பாளையங்கோட்டையில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏர்வாடி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசி பணி செய்ய வைக்கும் மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இளமாறன் கோபால், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பாளர் இரணியன், காங்கிரஸ் நிர்வாகி சேக் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.