தூய்மை சேவை பணி

ஜோலார்பேட்டையில் தூய்மை சேவை பணி நடைபெற்றது.

Update: 2023-10-01 18:48 GMT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த மாதம் 19-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் தூய்மை சேவை பணி நேற்று நடைபெற்றது. பழைய நகராட்சி அலுவலகம் பகுதியில் நகர மன்ற தலைவர் எம்.காவ்யா விக்டர் தூய்மைபணியை தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் ஜி.பழனி முன்னிலை வகித்தார்.

நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் ஒரு மணி நேரம் பொதுமக்களுடன் இணைந்து சாலையோரம் மற்றும் தெருக்களில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி தூய்மை செய்தனர். முன்னதாக பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை பணி மேற்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள், அனைத்து வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்