சாராயம் விற்ற துப்புரவு பணியாளர் கைது

சாராயம் விற்ற துப்புரவு பணியாளர் கைது

Update: 2022-06-20 17:13 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் பட்டறைகுளம் கரையில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், செல்வராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது40) என்பவர் புதுச்சேரி மாநில சாராயம் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன் முத்துப்பேட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்