அம்பை:
அம்பை நகரசபை சாதாரண கூட்டம், தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் அனுசியா, கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர்,
வரி வசூலர் இசக்கி கூட்ட தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பது என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சோலைச்சாமி மற்றும் நகரசபை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அம்பையில் சுதந்திர தினத்தையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கட்டப்பட்ட நுழைவுவாயில் (ஆர்ச்), நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. பின்னர் அது சேதமடைந்ததை தொடர்ந்து அரிமா சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், நுழைவுவாயில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. அம்பை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், அரிமா சங்க தலைவர் சந்திரசேகரன், செஞ்சிலுவை சங்க செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட நுழைவுவாயிலை திறந்து வைத்தார். விழாவில் அரிமா சங்க செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் பார்த்திபன், வர்த்தக சங்க மாநில துணைத்தலைவர் மார்டின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.