திருவட்டாரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
திருவட்டாரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவட்டார்:
திருவட்டாரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவட்டார் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் சகாய ஆன்றனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் வில்சன், மலைவிளை பாசி. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன் உள்பட பலர் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.