ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-03 18:45 GMT

ஊட்டி, 

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஊட்டியில் தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரிய குளறுபடிகளை சரி செய்து நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும். முத்தரப்பு கமிட்டிகளை உத்திரவாதப்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் நவீன் மற்றும் கட்டுமானம், சுமை, தையல் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்