சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

மேல்மொணவூரில் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-05 12:39 GMT

வேலூர் மேல்மொணவூரில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குப்பு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், செயலாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் பொன்முடி கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முறைசாரா தொழிலாளர்கள் வாரியத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை கைவிட வேண்டும். நேரடியாக மனு பெற்று பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். பணப்பலன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்