சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 30 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க கோரி ராமநாதபுரம் சி.ஐ.டி.யு. சார்பில் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மத்திய சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானம், நிர்வாகிகள் சுடலை காசி, தனுஷ்கோடி, வாசுதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட செயலாளர் சிவாஜி சிறப்புரை ஆற்றினார். இதில் டாஸ்மாக் தலைவர் நம்புராஜன், பஞ்சாலை நிர்வாகி அன்பரசன், போக்குவரத்து நிர்வாகிகள் மணிக்கண்ணு, ஆனந்த், பாஸ்கரன், போஸ், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.