குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம்
குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூத்தூர், அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.கதிரவன் சிறப்புரையாற்றி பேசுகையில், பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்ட நோக்கங்கள் குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், நுகர்வோர் எவ்வாறு தர முத்திரைகளை பார்த்து, தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பது குறித்தும், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் எவ்வாறு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். பள்ளி ஆசிரியர் செல்வராஜ் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சிகளை பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பூமாதேவி தொகுத்து அளித்தார். முடிவில்ஆசிரியை ரஞ்சனி நன்றி கூறினார்.