குஜிலியம்பாறை ராயப்பர், சின்னப்பர் ஆலய திருவிழா
குஜிலியம்பாறையில் ராயப்பர், சின்னப்பர் ஆலய திருவிழா நடைபெற்றது.
குஜிலியம்பாறையில் புனித ராயப்பர், சின்னப்பர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் நடைபெற்றது. திருவிழா தொடக்க நாளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பிறகு 24-ந்தேதி நற்கருணை ஆசி வழங்கும் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் 3-ம் நாளில் சிறப்பு திருப்பலியும், சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திருவிழாவின் நிறைவாக ராயப்பர், சின்னப்பர் புனிதர்களின் மின் தேர் பவனி இரவில் நடைபெற்றது. இந்த மின் தேர் பவனி, குஜிலியம்பாறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் குஜிலியம்பாறை, பாளையம், ராமகிரி, கோவிலூர், தி.கூடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.