கிறிஸ்தவ அமைப்பினர் கருப்பு பலூன்களை ஏந்தி ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவ அமைப்பினர்

Update: 2022-08-10 20:17 GMT

கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அனைத்து திருச்சபைகள் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல துணைத்தலைவர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். கிறிஸ்தவ நல்லெண்ணம் இயக்க செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஷ்குமார், பொதுச்செயலாளர் ஜோடேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்துகொண்டு கைகளில் கருப்பு பலூன்களை ஏந்தியபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் சி.எஸ்.ஐ. தேவாலய பொருளாளர் ராபிமனோகர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்