சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சோழவந்தான்,
சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, குப்புசாமி, செயல்அலுவலர் இளமதி, கோவில் ஆலோசகர் முருகேசன், இவ்வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் ஜவகர்லால் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றக்கூடிய பொருட்களுடன் மேளதாளத்துடன் வலம் வந்து கோவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணை தலைவர் லதாகண்ணன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், முத்துச்செல்வி சதீஷ்குமார், உபயதாரர் கருப்பட்டி அல்லூர் நாயுடு சமயத்தார்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.