திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா

திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா

Update: 2023-04-24 18:45 GMT

திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அம்பிகை சமேத வீழிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற தலங்களில் 61-வது சிவ தலம் ஆகும். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

தொடர்ந்து 10 நாட்கள் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் வருகிற 29-ந்தேதி மக நட்சத்திரத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்தமாதம் (மே) 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஆபரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சாமிக்கு பால், தயிர், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்