கோவில்பட்டியில் சித்திரை நட்சத்திர விழா

கோவில்பட்டியில் சித்திரை நட்சத்திர விழா நடந்தது.;

Update:2022-09-28 00:15 IST

கோவில்பட்டி:

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், விஸ்வகர்ம இளைஞர் பேரவை சார்பில் உலகை படைத்த தினம், புரட்டாசி சித்திரை நட்சத்திர விழா நடந்தது. விழாவையொட்டி விஸ்வேஸ்வர விநாயகர் ஆலய பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விஸ்வகர்ம இளைஞர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுக நயினார், செயலாளர் மனோகர், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்