சிப்ஸ் கடைக்கு ரூ.30,000 அபராதம்
தென்காசி அருகே சிப்ஸ் கடைக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி அருகே இலஞ்சி பகுதியில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த சீலிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் நேத்திரங்காய் சிப்ஸ்களை எடுத்து பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பினார். அங்கிருந்து வந்த அறிக்கையில் பாதுகாப்பற்ற உணவுப் பொருள் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கடையின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சிப்ஸ் கடைக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.