சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா

சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-14 18:45 GMT

கல்வராயன்மலையில் சின்னதிருப்பதி கிராமம் உள்ளது. இங்குள்ள சின்ன திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். முதலில் மன்னர்கள் மற்றும் தாகிதரர்கள் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் தாகிதார் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் அறநிலையத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

21-ந் தேதி தேரோட்டம்

இந்த நிலையில் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வெங்கடாஜலபதியை வழிபட்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்