குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும் முகாம்

டி.வி. புத்தூரில் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும் முகாம்

Update: 2023-04-25 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் தாலுகா டி.வி.புத்தூரில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு வீதி வகுப்பறை நிகழ்ச்சியில் குழந்தைகள் புத்தகங்களை வாசிக்கும் முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி பழனிவேல் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வீதி வகுப்பறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் செந்தில்குமார் புத்தகம் வாசிப்பின் அவசியம் பற்றி விளக்கி கூறினார். இதில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஞ்சுகம் நன்றி கூறினார். முடிவில் மாணவர்கள் அனைவரும் வீதியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்