குழந்தைகள் தினம்; தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2023-11-14 07:45 GMT

சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவ.14) குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு வரை இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20-ந்தேதி கொண்டாடப்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பை நினைவுகூரும் விதமாக நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,' தூய்மையான அன்பு, அளவற்ற உற்சாகம் ஆகியவற்றை நமக்கு வாரி வழங்கும் குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம். குழந்தைகளின் சிரிப்புதான் நம் உலகத்துக்கு ஒளியூட்டுகிறது.

பகிர்ந்தளித்தல், இரக்கவுணர்வு, நேசம், ஒற்றுமை, சமத்துவம், பேரன்பு என குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான பண்புகள் உள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குட்டி மழலை டீச்சர்களுக்கு இந்த பெரிய மாணவனின் குழந்தைகள் தின வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்