முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.;

Update:2022-11-24 00:15 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள், மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் தேசிய சட்ட பள்ளிக்கூடங்களில் படித்து வந்தால் 2022-23-ம் கல்வியாண்டு முதல் தொகுப்பு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

எனவே தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள், அவர்களின் விதவையர்கள் தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உதவித் தொகை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்