ஊராட்சி தலைவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு திறனாக்க பயிற்சி

ஊராட்சி தலைவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு திறனாக்க பயிற்சி

Update: 2023-04-13 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறனாக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் எம்.எம்.ஆர்.துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சிக்கந்தர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் சதாசிவம் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், தத்து குழந்தை பெறுவது குறித்த வழிகாட்டு முறைகள், கிராம அளவிலான கிராம பாதுகாப்பு குழுவின் பொறுப்புகள் குறித்து பேசினார். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கையேடு வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் சாந்தி, குழந்தைகள் தத்தெடுக்கும் மைய பொறுப்பாளர் நித்தியா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்