குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

பதுக்குளம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பாலமேனன் தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர் ஆறுமுககனி வரவேற்றார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் திருமணம் தடுத்தல், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினர் செல்வி பிளாரன்ஸ் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி கவுசல்யா, கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்