குழந்தை திருமண புகார்: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

சிதம்பரம் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் விசாரணை நடத்தினார்.

Update: 2023-05-24 13:45 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சமீபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேரில் வந்து, தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்