குழந்தை திருமணம் நடைபெறாத நிலையை உருவாக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறாத நிலையை உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

Update: 2022-07-16 16:38 GMT

தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறாத நிலையை உருவாக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.

குழந்தைகள் பாதுகாப்பு

சமூக பாதுகாப்புத்துறையின் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வளர்ச்சிக்கும், வளத்திற்கும் தேவையான அனைத்து வாய்ப்புகளும் தர்மபுரி மாவட்டத்தில் நிறைந்துள்ளன. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கட்டாயம் படிக்க வைக்க வைக்கவும், பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்வதை தடுக்கவும் உரிய கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றமாகும்.

பள்ளி இடை நின்ற குழந்தை

அத்தகையை செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் குழந்தை திருமணம் நடைபெறாத நிலையை உருவாக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்டத்தில் குழந்தை திருமணமே நடைபெறவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பள்ளி இடை நின்ற குழந்தைகள் கல்வியை தொடர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்