பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம்; 6 பேர் மீது வழக்கு
பள்ளி மாணவிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த ௬ பேர் மீது வழக்கு;
காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாணவிக்கும், ராயக்கோட்டை அருகே உள்ள நாகனூர் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத மாணவி காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நாகனூரை சேர்ந்த கிருஷ்ணசாமி (வயது 26), வள்ளி (45), சின்னராஜ் (55), லட்சுமி (40), ஜமுனா (45), நவீன் (28) ஆகிய 6 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.