மாவட்டத்தில் 705 மையங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்

மாவட்டத்தில் 705 மையங்களில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

Update: 2023-08-24 18:45 GMT

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 77 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் 3,469 பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகிறார்கள். தற்போது இன்று முதல் (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது, அதனைத்தொடர்ந்து.

கரூர் மாவட்டம் முழுவதும் மேலும் 628 மையங்களில் செயல்பட உள்ளது. இதன் முலம் 25,980 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். மொத்தம் 705 மையங்களில் 29,449 தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெற உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட 31 பள்ளிகளுக்கு தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மைய சமையற்கூடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான விழா நடைபெறும் பெரியகுளத்துபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து மண்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் உணவு அருந்தும் இடம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், புகழூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட 31 பள்ளிகளுக்கு மைய சமையற்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்