முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி அரியலூர் பயணம்..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
சென்னை,
சென்னையில் இருந்து வருகிற 28-ம் தேதி திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-ம் தேதி அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
சென்னையில் இருந்து வருகிற 28-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி செல்கிறார். அங்கிருந்து முதல்-அமைச்சர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்கிறார். மேலும் கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளையும் பார்வையிடுகிறார்.
அரியலூரில் 29-ம் தேதி நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். திருச்சியில் காகித ஆலையினுடைய விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு விழாவும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.