முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார்

மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.;

Update:2023-04-01 02:10 IST

அருப்புக்கோட்டை, 

மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டை நகர ஒன்றிய தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேரு மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் மணி வரவேற்றார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை கண்டு வடமாநில தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்

இவ்வாறு அவர் கூறினார்.

40 தொகுதிகளிலும் வெற்றி

திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:-

தமிழகத்தில் மகளிருக்கு உரிமை தொகை வழங்கியுள்ளது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறாரோ அவர் தான் பிரதமர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் பிரபாகரன், ஓன்றிய குழு தலைவர் சசிகலா, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் பாபுஜி, பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், நகர் மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்