முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா வருகை
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா வந்தார். மேலும் அவர் யானைகளுக்கு பழங்கள் வழங்கினார்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் அம்ரித், புலிகள் காப்பக கள இயக்குனரும் நீலகிரி வன பாதுகாவலருமான வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் முகாமுக்கு நீதிபதி என்.வி.ரமணா சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் உள்ளிட்ட பழங்கள் கொடுத்தார். தொடர்ந்து புலிகள் காப்பக பகுதியை சுற்றிப் பார்த்தார். நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.