செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-20 07:48 GMT

செஸ் ஒலிம்பியாட் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி நடைபெற உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் 10 ஏக்கர் நிலத்தில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட உள்ளது.

போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

இந்த நிலையில் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா போட்டி நடைபெற உள்ள ஓட்டல் வளாகத்திற்கு வருகை தந்தார்.

அங்கு ஒவ்வொரு வாகனமும் இடையூரின்றி நிற்கவும், வெளியேறவும் தக்க பாதையுடன் நிறுத்துமிடம் ஏற்படுத்துவது, அந்த வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எப்படி வெளியேறுவது, அதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்துவது என்றும் அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

மேலும் திருட்டு சம்பவங்கள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் வகையில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவருடன் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசண்முகசுந்தரம், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்