திருவாரூர், மன்னார் குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு

திருவாரூர், மன்னார் குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.

Update: 2022-07-26 17:30 GMT

திருவாரூர், மன்னார் குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 10-ந் தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. இதை பிரபலப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் செஸ் போட்டிகளும், சைக்கிள் ஊர்வலமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜோதி ஓட்டம் மன்னார்குடியில் தொடங்கி திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. அங்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. வரவேற்றார். பின்னர் அங்கிருந்து புறபட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சங்கீதா, நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், நகரசபை உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், தடகள சங்க செயலாளர் தியாகபாரி, கால்பந்து கழக துணைத்தலைவா சீலன், கூடைபந்து கழக தலைவர் பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் பிரபாகரன், சதுரங்க கழக துணைத்தலைவர் முரளிதரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடி வந்த இந்த ஜோதி ஓட்டத்தை தேசிய மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, நகரசபை தலைவர் சோழராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், நகரசபை துணைத்தலைவர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி, ஓய்வு பெற்ற பேராசிரியர் இருளப்பன், செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண தேர்வு செய்யப்பட்ட செஸ் வீராங்கனை அஸ்மத் ஜெஸ்ரியா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகு வேந்தன், மாவட்ட செஸ் போட்டி அமைப்பாளர் பாலகுணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சென்ணுகிருஷ்ணன், தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பின்லே மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஜோதி ஓட்டத்துக்கு பள்ளியின் தாளாளர் ஸ்டான்லி, பள்ளி முதல்வர் வசந்தி செல்வகனி, துணை தலைமை ஆசிரியர் டேனியல் ராஜாஜி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்