செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நந்திவரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2022-07-19 08:32 GMT

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் கார்த்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ, மாணவி கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற துணை தலைவர் வக்கீல் லோகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி காஞ்சீபுரம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இந்த பேரணியில் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அச்சரப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் விழிப்புணர்வு கோலங்கள் வரையப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்