மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டி

மாணவ- மாணவிகளுக்கான செஸ் போட்டியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.;

Update:2022-07-22 00:02 IST

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதனையெட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 15-ந்் தேதி முதல் செஸ், ஓவியம், வினாடி வினா, ரங்கோலி, கோலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறும்.

இதில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மூலம் பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஓவியப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் வரைந்த ஓவிய புகைப்படம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

இதற்காக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா வரவேற்று பேசினார்.

கலெக்டர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செஸ் போட்டிகள் நடைபெற்றது. அதன் பின்னர் கலை நிகழ்ச்சிகளும், மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் ஜி.சதாசிவம், நகராட்சி பொறியாளர் சங்கர், தாசில்தார் சம்பத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்