சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு இன்று வெளியீடு

கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

Update: 2024-03-28 22:33 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

பி.காம், முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். முடிவுகள் வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும். இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தை 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்