சென்னை - திருச்செந்தூர் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றம்
சென்னை - திருச்செந்தூர் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னையில் இருந்து திருச்சி வழியாக திருச்செந்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டு, வண்டி எண் 20605 - 20606 அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளது. இந்த மாற்றம் வருகிற 15-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.50 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு திருச்செந்தூரை அந்த ரெயில் சென்றடையும். இந்த ரெயில் வழக்கமாக செல்லும் நேரத்தை விட 40 நிமிடம் முன்பாக செல்கிறது. இதேபோல் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 16-ந்தேதி முதல் அதிவிரைவு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.