சென்னை: சொத்து பிரச்சினையில் தந்தையை சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன்

சொத்து பிரச்சினையில் தந்தையை கியாஸ் சிலிண்டரால் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-03-21 23:00 IST

சென்னை,

சென்னை கொளத்தூர், ராஜமங்கலம் பாபாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மதுசூதனன். 64 முதியவரான இவர், கூலித்தொழில் செய்து வந்த நிலையில், தன் மனைவி, திருமணமான இரண்டு மகன்கள் மற்றும் மகள்களுடன் கூட்டாக வசித்து வந்திருக்கிறார். மேலும், மதுசூதனன் மீது பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் நான்காவது மகனான ஜார்ஜ்புஷ்ஷூடன் சொத்துக்களை பிரிப்பதில் மதுசூதனனுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மதுபோதையில் மகனுக்கும், தந்தைக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரால் மதுசூதனனை அவரது மகன் ஜார்ஜ் புஷ் அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகராறில், தந்தையை கொன்ற ஆத்திரத்தில் வீட்டில் இருந்தவர்கள் ஜார்ஷ் புஷ்ஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்